காரைக்கால் நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் வஸந்த உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2017 05:05
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் வஸந்த உற்சவம் மற்றும் கோடைத் திருமஞ்சனப் பெருவிழா நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் வஸந்த உற்சவம் மற்றும் கோடைத் திருமஞ்சனம் விழாவையொட்டி காலை.9.30மணிக்கு விசேஷ தீபாரானை சாற்றுமறை கோஷ்டிப்பிரசாதம் நடந்தது. பின் மூலவர் ரங்கநாதர் மற்றும் உற்சவ பெருமாளுக்கு மஞ்சல்பொடி, திரவியப்பொடி,பன்னீர்,பால், இளநீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
காலை 11மணிக்கு உச்சிகால திருவாராதனம்,தீபாரதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் பல பூச்செடிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு உற்சவர் மூலஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 8.30 மணிக்கு கோடைத் திருமஞ்சனப் பெருவிழாவையொட்டி சுற்றுக்கோவில் மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12 மணிக்கு தீபாராதனை சாற்றுமறை கோஷ்டிப் பிரசாதம் ஆகியவை சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்ய கல்யாணப்பெருமாள் பக்த ஜனசபாவினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் வஸந்த உற்சவத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசித்தனர்.