ரமலான் நோன்பு நாளை தொடக்கம் மத்திய ஹிலால் கமிட்டி அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2017 01:05
திருநெல்வேலி, திருநெல்வேலி மத்திய ஹிலால் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை எந்த பகுதியிலும் பிறை தென்படாததால் நாளை ஞாயிற்றுக்கிழமை மே 28, ரமலான் நோன்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு, ரமலான் பிறை பார்த்து கடை பிடிப்பது வழக்கம். வெள்ளிக்கிழமை ஷாபான் பிறை 29 ஆக இருப்பதால் பிறை தென்பட்டால் சனிக்கிழமை முதல் நோன்பு கடைபிடிக்க வேண்டும். அதன்படி, ரமலான் பிறை தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று, ஜங்ஷன் ஜூம்ஆ பள்ளிவாசலில் வைத்து நடந்தது. மாவட்ட ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் சலாஹூத்தீன்ரியாஜி தலைமை வகித்தார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அரசு ஹாஜி எம். முஹம்மது கஸ்ஸாலி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு ஜமாத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஞாயிறு முதல் ரமலான் நோன்பினை கடைபிடிக்க வேண்டும் என்றும், சனிக்கிழமை இரவில் இருந்து த்ராவிஹ் தொழுகை நடத்த வேண்டும் என ஜமாத்துல் உலமா சபை, ஹிலால் கமிட்டி முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.