பதிவு செய்த நாள்
29
மே
2017
10:05
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது. ஆயிக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆரூரா...தியாகேசா... என, கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தது இழுத்து வருகின்றனர்.
திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேரோட்டவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆரூரா...தியாகேசா... என, கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்.இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேரோட்டம். ஆழித்தேரானது, இருபத்தி நான்கரை அடி நீளம்,ஒன்றரை அடி உயரம் கொண்ட இரண்டு அச்சுகளில்,9 அடி விட்டமும்,ஒன்றரை அடி அகலம் உடைய நான்கு இரும்பு சக்கரங்களின் மேல் கலை சிற்பங்களுடன் அமைந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம்,96 அடி,எடை,300 டன் ஆகும்.
இரண்டு நாட்கள் சிறப்பு பூஜைகளுக்குபின்,இன்று (மே29ல்) காலை , ஆழித்தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேரோட்டத்தில் ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்றார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்து 50 ஆயிரத்திற்குள் மேற்பட்ட பக்தர்கள் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.