பதிவு செய்த நாள்
29
மே
2017
11:05
காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலின் பிரசாத குங்குமம், இயற்கையான பொருட்களை கொண்டு, சுத்தமான முறையில் தயாரிப்பதால், நெற்றியில், தழும்பு, அரிப்பு ஏற்படாது என, இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளவர் தெரிவித்தார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பிரசாதமாக வழங்கும், மெரூன் நிற குங்குமத்திற்கு, பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
32 ஆண்டுகளாக, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு, குங்குமம் சப்ளை செய்யும், சி.கே.வெங்கட்ராமன் கூறியதாவது, என் தந்தை, சி.வி.காமகோட்டி சாஸ்திரிகளிடம், காஞ்சி மகா பெரியவர் கூறிய அறிவுரையின் படி, துாய்மையான மஞ்சளுடன், எலுமிச்சம் பழம், தேங்காய் எண்ணெய், குறிப்பிட்ட சதவீதத்தில், அளவு படிகாரம் கலந்து குங்குமம் தயாரிக்கிறோம். சிலர், நிறத்திற்காக ரசாயனங்களையும், படிகாரத்தை அதிகளவிலும் பயன்படுத்துகின்றனர். இதனால், நெற்றியில் அரிப்பு, தழும்பு ஏற்படும். எங்கள் குங்குமம், நீண்ட நாட்கள் ஆனாலும் பூச்சி தாக்குவதில்லை. காமாட்சியம்மன் கோவிலுக்கு, ஒரு நாளைக்கு, 20 கிலோ முதல், வெள் ளி ரதம் போன்ற உற்சவ நாட்களில், 50 கில�ோ வரை குங்குமம் சப்ளை செய்கிறோம். 100 கிராம் குங்குமம், 20 ரூபாய்க்கு விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.