பதிவு செய்த நாள்
29
மே
2017
12:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான விஜயராகவ பெருமாள், விஜயலட்சுமி தாயார் ஆகிய கோவிலில் கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழாநேற்று துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஏழு யாக சாலைகள், 108 கலசங்கள் அமைக்கப்பட்டன. காலை 8:00 மணி முதல், நண்பகல், 11:30 மணி வரை , அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல், மஹா சாந்தி பூர்ணாஹூதி மற்றும் உக்த ஹோமம் நடந்தது. இன்று, அதிகாலை, 4:30 மணிக்கு, சுப்ரபாதம், விஸ்வரூபம், கும்ப திருவாராதனம் மஹா பூர்ணாஹூதியும், காலை, 6:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமும், காலை, 7:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. காலை, 9:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் மற்றும் இரவு, உற்சவர் வீதியுலாவும் நடக்கிறது. நேற்று நடந்த ஹோமம் நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.