பெருநாழி: பெருநாழி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று இரட்டை மாட்டுவண்டிப்பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடந்தது. பெரிய மாட்டு வண்டிப்பந்தயம் புதுக்கோட்டையில் இருந்து அரண்மனை மேடு வரை 12 கி.மீ., தொலைவிற்கு நடந்தது. முதல்பரிசு 20 ஆயிரம் காடமங்கலம் சந்தியாதேவியும், இரண்டாம் பரிசு 18 ஆயிரம் மதுரை அவனியாபுரம் மோகன்குமாரசாமியும், மூன்றாம் பரிசு 15 ஆயிரம் உச்சிநத்தம் ரம்யாவும் பெற்றனர். சிறிய மாட்டு வண்டிப்பந்தயம் புதுக்கோட்டையில் இருந்து பாம்புல்நாயக்கன்பட்டி வரை 6 கி.மீ., தொலைவிற்கு நடந்தது. முதல்பரிசு ரூ.16 ஆயிரம் மதுரை அவனியாபுரம் பசும்பொன் குமாரசாமியும், இரண்டாம் பரிசு ரூ.14 ஆயிரம் தூத்துக்குடி சங்கரபேரி ஆறுமுகப்பாண்டியனும், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரம் தூத்துக்குடி கம்பத்துப்பட்டி வீரசின்னராஜ் பெற்றனர். மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கு பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.