சிவகங்கை கிராம கோயில் விழாக்களுக்கு சிலை தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2017 12:06
சிவகங்கை: சிவகங்கை அருகே கிராமக் கோயில் விழாக்களுக்கு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சித்திரை முதல் புரட்டாசி வரை கிராம அய்யனார் கோயில்களில் புரவி (குதிரை) எடுப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் புரவி, தவழும் பிள்ளை, மாடு, சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயில்களில் நேர்த்திக்கடனாக செலுத்துவர். இதற்கான சிலைகள் சிவகங்கை அருகே சுந்தரநடப்பு பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. ஏ.ராமச்சந்திரன் கூறியதாவது: கோயில் விழாவிற்கு நாள் குறித்ததும் எங்களிடம் சிலை செய்ய ஆர்டர் கொடுப்பர். சிலைக்கு தகுந்த பணத்தை கூலியாக வாங்குவோம். சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதிகளில் இருந்தும் வாங்கிச் செல்கின்றனர்.கடந்த மாதம் வரை மண் அள்ளுவதற்கு கெடுபிடி இருந்தது. தற்போது அரசு கட்டுப்பாடு நீக்கியதால் மண் எடுப்பதில் சிரமம் இல்லை. இதனால் தாமதமின்றி சிலைகளை செய்து வருகிறோம், என்றார்.