பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
02:06
பவானி: பவானி, ஜம்பை பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. பவானி - ஆப்பகூடல் சாலையில் உள்ள ஜம்பை கிராமத்தில், பத்ரகாளியம்மன் குண்டம், பொங்கல் திருவிழா கடந்த மே, 16ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணியளவில், தளவாய்பேட்டையில் இருந்து முப்பாடு படைக்கலம் கொண்டு வருதல், செலம்பூரம்மன்
அழைத்து வருதல், ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. பின்னர் கோவில் முன், 60 அடி நீள குண்டத்தில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தளவாய்பேட்டை,
சின்னமோளபாளையம், பெரியமோளபாளையம், புன்னம் உட்பட, 18 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.