கடலாடி, கடலாடி அருகே மீனங்குடி கிராமத்தில் கல்லடி பெருமாள் கோயிலில் சுயம்பு வடிவில் அமைந்துள்ள மூலவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வைகாசி களரி விழா நடந்தது. கடந்த மே 24 அன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. மதுரை அழகர் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரைக் கொண்டு பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவில் சாட்டை மூலம் பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.