பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
02:06
திருத்தணி: முனீஸ்வரர் கோவிலில், நேற்று யாக பூஜையும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருத்தணி அடுத்த, குன்னத்தூர் கிராமத்தில், முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் திருப்பணிகள் நடந்து முடிந்து, நேற்று, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதற்காக கோவில்வளாகத்தில், ஒரு யாகசாலை, 5 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் காலையில் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு மஹா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதையடுத்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், குன்னத்தூர், நாபளூர், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
அம்மனை வழிபட்டனர்.