திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, சொரக்கொளத்தூர் கிராமத்தில், 80ம் ஆண்டு வசந்த விழா கொண்டாடப்பட்டது. கடந்த, 7ல், காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழாவில், தினமும் மஹாபாரத கதை நாடகம் நடந்து வந்தது. நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீ மிதி விழா எனப்படும், அக்னி வசந்த விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் விரதமிருந்து, தீ மிதி விழாவில் பங்கேற்றனர். இன்று, தர்மருக்கு பட்டாபிஷேகம் விழா நடக்கிறது.