பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
02:06
கொடுமுடி: கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி கோவில், கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கொடுமுடி தாலுகா, நஞ்சை கொளாநல்லியில், காவிரி ஆற்றின்
மேல்கரையில், பங்கையர்செல்வி உடனமர் பாம்பலங்கார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 1956ல் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 61 ஆண்டுகள் கழிந்த நிலையில், இரண்டு கோடி ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. ராஜகோபுரம் உட்பட ஐந்து கோபுரங்களும் அழகிய முறையில் கட்டி முடிக்கப்பட்டன. கும்பாபிஷேக விழா, நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, 25 யாக குண்டங்கள் அமைத்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.