காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வர சுவாமி கோவில் வைகாசி திருவிழாவையொட்டி இன்று தேர் திருவிழா நடைபெறுகிறது. வைகாசி பெருவிழா கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி தெருவடைச்சான்; 4ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய விழாவான தேர்த்திருவிழா இன்று நடைபெற உள்ளது. காலை 6:00 மணிக்கு மேல் தேர் புறப்பாடு நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடையும்.