பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
01:06
திருவாரூர்: திருவாரூர் அருகே முடிகொண்டானில், ஆலங்குடி சுவாமிகளின் 82வது ஆராதனை தினம் கொண்டாடப்பட உள்ளது. ஸ்ரீஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் தலைவர் சுந்தரம் கூறியதாவது: முடிகொண்டானில், ஏப்., 20ல் ஆராதனை மகோற்சவம் துவங்கியது. ஸ்ரீமத் பாகவதம், சகஸ்ரநாம பாராயணம், ப்ரவசனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஜூன் 8 மண்டல பாராயணம் நடக்கிறது.ஸமாராதனை அன்னதானம் - 4 லட்சம் ரூபாய்; பாகவத பாராயணம், ப்ரவசனம், பஜனை, சம்பாவனை - 2 லட்சம்; பூர்ணமாக ஒரு ஸப்தாக உபயம் - 50 ஆயிரம்; ஒரு நாள் ஸமாராதனை அன்னதானம் - 7,000; ஒரு ஸப்தாஹ சங்கல்பம் - 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்படி உற்சவத்திற்கு உதவுபவர்கள், ஸ்ரீ
ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் என்ற பெயருக்கு, வரைவோலை, காசோலை மற்றும் இ - டிரான்ஸ்பர் மூலம் அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு, ரகுபதி அய்யர் 04366 -
230142 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.