சபரிமலையில் அப்போலோ மையம்: பக்தர்களுக்கு இலவச சேவை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2011 12:11
மதுரை : மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மையம் சபரிமலை பம்பாவில் நவ., 16 முதல் செயல்பட உள்ளது.சபரிமலை சீசனில் பத்து ஆண்டுகளாக, அப்போலோ மருத்துவமனை, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துடன் இணைந்து, படுக்கை வசதிகள், டெலிமிடிசின் வசதியுடன் 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவு மையம் அமைத்து, பக்தர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறது.இந்தாண்டும் மருத்துவமனை இயக்குனர் ரோகிணி ஸ்ரீதர், முதுநிலை பொது மேலாளர் சேகர் தலைமையில், பம்பாவில் மருத்துவ மையம் செயல்பட உள்ளது. அவசர மருத்துவ சேவை விரும்புவோர் 04735 - 203 490, 203 407 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.