பதிவு செய்த நாள்
08
ஜூன்
2017
02:06
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டையில், வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நாமகிரிப்பேட்டையில், பழமையான வீரபத்திரசுவாமி கோவில் உள்ளது. கோவில் கோபுர பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக, கடந்த, 5ல் கங்கா பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, 6ல் கோபூஜை, தாலபூஜை, முதற்கால யாக பூஜைகள் துவங்கின. நேற்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், கடக லக்கினத்தில் வீரபத்திரர் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள ராஜகணபதி, பத்ரகாளியம்மன், முருகர், நவக்கிரகங்கள், பஞ்சலிங்கம், ரேணுகாச்சாரியார் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். சுவாமி போல் வேடமணிந்து ஆடிய கலைஞர்கள் அனைவரையும் கவர்ந்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.