அனுப்பர்பாளையம் : திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சல், பொம்மநாயக்கன் பாளையத்தில் செல்வவிநாயகர் மற்றும் பழனி ஆண்டவர் கோவிலில், இன்று கும்பாபிஷேக விழா, இன்று, காலை, 8:30 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று நல்லகிணறு தோட்டத்திலிருந்து பக்தர்கள் முளைப்பாலிகை எடுத்து குதிரைகளோடு வாத்தியம் முழங்க ஊர்வலமாக கோவிலை சென்டடைந்தனர். மாலை, திருவிளக்கு வழிபாடு நடந்தது. இன்று, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.