பதிவு செய்த நாள்
08
ஜூன்
2017
02:06
காளிப்பட்டி : வைகாசி விசாகத்தையொட்டி, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முருகன் அவதரித்த திருநட்சத்திரமான வைகாசி விசாகத்தையொட்டி,
ஆட்டையாம்பட்டி அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, மயில் வாகனத்தில் வள்ளி
தெய்வானையுடன் எழுந்தருளிய கந்தசாமி, சிறப்பு அலங்காரத்தில், கோவிலை வலம்வந்தார். அதேபோல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் முருகன் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம்
செய்தனர்.
* ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், மூலவர்
பாலசுப்ரமணியருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, ராஜ சிறப்பு
அலங்காரத்தில், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர், கோட்டை
காயநிர்மலேஸ்வரர், வெள்ளை
விநாயகர் கோவில் பாலசுப்ரமணியர், வாழப்பாடி குமரவடிவேல் தெருவில் உள்ள
சுப்ர மணியர், வீரகனூர் குமரன்மலை முருகன், தம்மம்பட்டி
பாலதண்டாயுதபாணி ஆகிய கோவில்களில் அபிஷேகம் நடந்தது.