வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை, கவர்னர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பரிவேட்டை, திருக்கல்யாணம் உள்ளிட்ட உற்சவங்கள் நடந்தன. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு, கவர்னர் கிரண்பேடி வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். முதல்வர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ., உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாட வீதி வழியாக வழியாக பவனி வந்த தேர், காலை 11:00 மணியளவில் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் சிவனடியார்கள் செய்தனர்.