பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
03:06
திருவள்ளூர் : பவுர்ணமியை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவர், மாடவீதி புறப்பாடு, இன்று நடக்கிறது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவர் கோவிலில், இன்று, பவுர்ணமியை முன்னிட்டு, காலை 9:30 மணிக்கு பெருமாளுக்கும், காலை 10:00 மணிக்கு, கனகவல்லி தாயாருக்கும், திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 5:30 மணிக்கு, பெருமாள் மாடவீதி புறப்பாடும், மாலை, 6:00 மணிக்கு தாயாருடன் உள் புறப்பாடும் நடைபெறுகிறது.