பதிவு செய்த நாள்
14
ஜூன்
2017
01:06
தர்மபுரி: தர்மபுரி அருகே, லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று இஸ்கான் பக்தர்களின் பஜனை ஊர்வலம் நடந்தது. தர்மபுரி அருகே உள்ள மாதேமங்கலத்தில், பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர், காசி விஸ்வாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 12ல் துவங்கியது. இந்த விழாவை
முன்னிட்டு, நேற்று அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், பஜனை ஊர்வலம் நடந்தது.
உங்கரானஹள்ளியில் துவங்கிய இந்த ஊர்வலம், வெங்கட்டம்பட்டி, புதூர், காமராஜ் நகர் வழியாக, மாதேமங்கலத்தில் உள்ள கோவிலை வந்தடைந்தது. இதில், கிருஷ்ணர் மற்றும் ராமரின் பக்தி கீர்த்தனைகள் பாடியும், நடனமாடியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஓசூர் இஸ்கான் மேலாளர் சீனிவாச ஷியாம் தாஸ், பகவத் கீதை உபன்யாசம் நிகழ்த்தினர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.