சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயிலில் உருக்குலைந்த பக்தர்கள் சத்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2017 11:06
ராமநாதபுரம்: சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட சத்திரம் பராமரிப்பு இல்லாததால் சிதைந்துள்ளது. சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்றதாகும். சேதுக்கரை ஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏராளமானோர் வருகை தருகின்றனர். பக்தர்கள் தங்கி செல்வதற்காகவும், இங்கு யாகம் வளர்த்து பூஜை செய்வதற்காகவும் பழங்காலகல் மண்டம் உள்ளது. இந்த கல் மண்டபம் பராமரிப்பு செய்யாமலும். புதுப்பிக்கப்படாததாலும், சிதைந்து போய் உள்ளது. இந்த மண்டபத்திற்குள் குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் வருகை தரும் பக்தர்கள் வேறு வழியின்றி இதில் தான் தங்கி சமைத்து, சாப்பிட்டு செல்கின்றனர். இந்த கல் கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதுக்கரை வந்து செல்லும் பக்தர்கள் தங்கி செல்லும் விதமாக இந்த சத்திரத்தை புதுப்பித்து தர வேண்டும்.