Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜ்யேஷ்டாபிஷேகம் இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓடி ஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
04:06

* ஓடியாடி உழைத்து வாழ்வதே கடவுள் விரும்பும் வழிபாடு. உழைப்பில் கிடைத்த பணத்தை உழைக்க முடியாதவர்களுக்கு கொடுங்கள். வருமானத்தில், பத்து சதவீதம் வரை பிறருக்காகச் செலவழிக்கலாம்.
*கடந்த காலம் பற்றி வருந்தாதீர்கள். நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி வாழப் பழகுங்கள்.
* நட்பு, கருணை, மகிழ்ச்சி, மனத்தூய்மை, பொறுமை, விடாமுயற்சி போன்ற தெய்வீகப் பண்புகளை வளர்த்துக்
கொள்ளுங்கள். மனதில் எப்போதும் அமைதி குடியிருப்பதை உணர்வீர்கள்.
*தனியாக ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி, ஓம் என்னும் மந்திரத்தை ஜெபியுங்கள். எண்ண ஓட்டத்தை சாட்சியாக இருந்து கவனியுங்கள். இதன் மூலம் மனம் பலம் பெறும்.   
*எளிய உணவை மிதமான அளவில் சாப்பிடுங்கள். சாப்பிடும் முன் கடவுளுக்கு படைத்து வழிபடுங்கள். உணவில் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாரம் ஒரு வேளை விரதமிருப்பது அவசியம்.
*அனைவரிடமும் திறந்த மனதுடன் பழகுங்கள். உண்மையைப் பேசுங்கள். தேவைப்படும் போது பேசாமலும் இருங்கள்.  
*பொறுமை கடலினும் பெரியது. கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.  மற்றவர் குறைகளை மறக்க முயலுங்கள்.
*தேவைகளைக் குறைத்து, இருப்பதில் திருப்தி காணுங்கள். எளிய
வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் லட்சியமாக இருக்க வேண்டும்.
*வேலைக்காரர்களை  நம்பி காத்திருக்க வேண்டாம். சுயதேவைகளை நீங்களே பூர்த்தி செய்யுங்கள்.
*மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். யாருடைய உணர்ச்சியையும் புண்படுத்தக்கூடாது.
*மகான்களின் வாழ்க்கை வரலாறு, உபதேசங்களைப் படித்து, அதை வாழ்வில் கடைபிடிப்பதே அவர்களுக்குச் செய்யும்   
மரியாதை.
*பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் தூய்மை பேணுங்கள்.
*சுயநலம் மறந்து பிறருக்கு இயன்ற அளவில் உதவுங்கள்.
*தத்துவம் கேட்பதை விட, பயனுள்ள ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தியானம், யோகப்பயிற்சியில் ஈடுபடுவதை அன்றாடக் கடமையாக கொள்ள வேண்டும்.
*உணவு மிதமாகவும், எளிதில் ஜீரணமாகும் விதத்திலும் இருக்க வேண்டும். காரம், புளிப்பு குறைப்பது நல்லது.
*பிறருக்கு நல்லதை எண்ணுவதும், செய்வதும் மட்டுமே ஆன்மிகம். மனதில் சிறிதும் ஆணவம் கூடாது.
*உலகத்தை உங்களின் குடும்பமாகக் கருதுங்கள். உள்ளதைப் பிறருக்கு பங்கிட்டுக் கொடுங்கள். எல்லா உயிர்களையும் நேசிப்பதோடு, மானசீகமாகவும் வழிபடுங்கள்.
*தினமும் நாள்குறிப்பு எழுதுங்கள். கடமையில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.
*எந்நிலையிலும் உண்மை பேசுங்கள். கொஞ்சமாகவும், இனிமையாகவும் பேசப் பழகுங்கள்.  - சொல்கிறார் சிவானந்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar