பதிவு செய்த நாள்
26
ஜூன்
2017
12:06
குளித்தலை: மேலமருதூர், போத்தராவுத்தன்பட்டி காளியம்மன் கோவில்களில், திருவிழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த, மேலமருதூர் காளியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று மருதூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து, சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, மேட்டு மருதூர் விநாயகர் கோவில் பக்தர்கள் சார்பில், வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அக்னிச்சட்டி, அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பின், சுவாமிக்கு குட்டிக்காவல் கொடுக்கப்பட்டு, மறுநாள் காலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல், போத்தராவுத்தன்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிராமமக்கள் கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக் குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்தனர்.