கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2017 03:06
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவி லில் மழை வேண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவி லில் மூன்றாவது ஆண்டாக உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் யாக மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் கள் விளக்கேற்றி பூஜை செய்தனர். பூஜைக்கு, ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்க பூபதி தலைமை தாங்கினார். தொழிலதிபர் கோபிநாத் முன்னிலை வகித்தார். முன்னாள் சேர்மன் ரங்கநாதன் பூஜையை துவக்கி வைத்தார். விழா குழு வழக்கறிஞர் வைகைதமிழ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை குமார் பட்டாச்சாரியார் செய்தார். சுதர்சனம் பாகவதர் தலைமையிலான பாகவத குழுவினர் சிறப்பு பஜனை நடத்தினர்.