பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
01:06
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று மூன்றாம் ஆண்டு, மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. சுவாமி சன்னதியில் காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை சிவனடியார்களின் சிவபூஜை வழிபாடு நடந்தது. தொடர்ந்து சுவாமி சன்னதியில், குரு பூஜை, சிறப்பு ஹோமங்கள் நடந்தன. சிவ பக்தர்கள் தேவாராம், திருவாசகம் பாடி வழிபட்டனர். பின்னர், மாணிக்கவாசகர் மற்றும் யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் மாகேசுவர பூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. ஆறு அடி உயரத்தில் பஞ்சலோக மாணிக்கவாசகர், சிவபெருமான், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், விநாயகர் சுவாமி சிலைகள், ஏழு வாகனங்களில் ஆத்தூர் நகர் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.