ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2017 01:06
ஈரோடு: கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நாளை நடக்கிறது. இவ்விழா தொடக்க நிகழ்ச்சியாக நேற்று கொடியேற்றம் நடந்தது. நடராஜர் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். அதைத் தொடர்ந்து நாயன்மார்கள் சன்னதியில், மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது. அலங்காரிக்கப்பட்ட உற்சவர் சிலைக்கு, வெள்ளிக் கவசத்தில் அலங்காரம், சிறப்பு வழிபாடு நடந்தது. விழாகுறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது: நடராஜருக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோனம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தி, புரட்டாசி சுக்ல சதுர்த்தி, மார்கழி திருவாதிரை, மாசியில் சுக்லசதுர்த்தி. ஆகிய நட்சத்திரங்களில் நடக்கும். இதில், ஆனித் திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது. இதில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.