விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்: நடராஜர் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2017 01:07
விருத்தாசலம்: ஆனி திருமஞ்சனத்தையொட்டி, விருத்தாசலத்தில் நடராஜர் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணியளவில் நடராஜர் சன்னதியில் நடராஜர், சிவகாமசுந்தரி உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை, வீதியுலா நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.