பதிவு செய்த நாள்
01
ஜூலை
2017
02:07
வேலூர்: குடியாத்தம் அருகே நடந்த, கோவில் கும்பாபிஷேக விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே செம்பேடு கிராமத்தில், வானளவன் மகா முனீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை, 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நடந்தது. தொடர்ந்து, 1,008 எட்டு மந்திரங்கள் பாடி, அக்னி பூஜைகள் செய்து முனீஸ்வரருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மற்றும் ஏராளமான, தே.மு.தி.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவில் கும்பாபிஷேக கமிட்டி சார்பில், விஜயகாந்த்துக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.