ஆடிச்செவ்வாயில் தொடங்கி, ஓராண்டுக்கு வாரம் தோறும் மேற் கொள்வது செவ்வாய் பிள்ளையார் விரதம். அங்காரகன் விநாயகரை நோக்கி தவமிருந்ததன் பயனாக, தேவர்களுடன் அமிர்தம் உண்ணும் வாய்ப்பும், நவக்கிரகங்களில் மங்களனாக(செவ்வாய்) விளங்கும் பாக்கியமும் பெற்றார். ஆடிச்செவ்வாய் விரதம் மேற்கொள்பவருக்கு நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வம் கிடைக்கும். நீண்ட கால நோயும் பறந்தோடும். ஜூலை18 முதல் ஓராண்டுக்கு இந்த விரதம் மேற்கொள்ளலாம்.