இப்போது, அட்சய திரிதியை நாளில் நகை வாங்கும் பழக்கம் உள்ளது. அதே போல் ஆடிப்பெருக்கும் (ஆக.3) நகை வாங்க நல்ல நாளாகும். இந்நாளில் வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் வாங்கலாம். செய்யும் நற்செயலால் புண்ணியம் பெருகுவது போல, இந்நாளில் துவங்கும் செயல்கள் பல மடங்காகப் பெருகும். புதிய முயற்சியில் ஈடுபட ஆடிப்பெருக்கு உகந்ததாகும். விவசாயிகள் அவரை, பீர்க்கு, பூசணி, புடலை போன்றவற்றை இந்நாளில் விதைக்க அமோகமகசூல் கிடைக்கும்.