பதிவு செய்த நாள்
07
ஜூலை
2017
02:07
திருவள்ளூர் : பூண்டி அருகே உள்ள ராகவேந்திர க்ரந்தாலயாவில், ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், பூண்டி நீர்த்தேக்கம் அருகில், சூர்யோதயா நகரில் ராகவேந்திர க்ரந்தாலயா அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம், பஞ்சகவ்ய துவாதசியை முன்னிட்டு, ராகவேந்திரருக்கு, காலை 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. வியாழக்கிழமையான நேற்று, காலை 8:00 மணிக்கு, பஞ்சாமிர்த அபிஷேகமும், காலை, 11:30 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெற்றது. பூண்டி மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் ராகவேந்திரரை வழிபட்டனர்.