150 ஆண்டு பழமையான நல்லூர் மாதேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2017 12:07
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த நல்லூரில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் புனரமைப்பு பணி, சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை, பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை, கணபதி யாகம் மற்றும் யாகசாலை பூஜைகள் செய்து, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.