பாகம்பிரியாள் கோயிலுக்கு புதிய தேர் செய்யும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2017 12:07
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் புதிய தேர் செய்யும் பணிகள் துவங்கியது.திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமானோர் பாதயாத்திரையாகவும் செல்வார்கள். இக் கோயிலில் சிறிய தேர் உள்ளது. மாட்டுவண்டி சக்கரத்தில் அமைந்துள்ளதால், பக்தர்கள் சுலபமாக இழுத்து செல்கின்றனர். இத் தேரை பெரிய தேராக வடிவமைக்க கிராமத்தினர் முடிவு செய்தனர். இது குறித்து தேவஸ்தான கவுரவ கண்காணிப்பாளர் சுந்தராஜன் கூறியதாவது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக் கோயில் தேரை,பனிரண்டரை கிராமத்தினர் சேர்ந்து பெரிய தேராக வடிவமைக்க முடிவு செய்துள்ளனர். முதல் கட்ட பணியாக தேருக்கு மரம் வெட்டபட்டு, பூஜை நடந்தது. ஒரு ஆண்டிற்குள் தேர் முழு வடிவம் பெறும், என்றார்.