பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
12:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம், திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம், சைவத்திருமுறை நேர்முக பயிற்சி மையம் சார்பில், பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சியில், திருவாசகம், திருக்கோவையார், 8ம் திருமுறை முற்றோதல் நடந்தது. இதில், சைவ சித்தாந்தம் மற்றும் சைவத்திருமுறை பயிற்சி மைய மாணவர்கள், ஓதுவார் மூர்த்திகள், சிவனடியார்கள், ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பயிற்சி மைய பேராசிரியர் வி.பழனி செய்திருந்தார்.