பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
12:07
திருக்கழுக்குன்றம்: வழுவதூரில், சவுந்தரநாயகி சமேத அக்னிபுரீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதூரில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த , சவுந்தரநாயகி சமேத அக்னிபுரீஸ்வரர் கோவில் உள்ள து. இங்கு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகவிழா நடந்தது. இதையடுத்து, வருஷாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு நடந்தது. இவ்விழாவைஒட்டி, கணபதி பூஜையும், கலசபூர்வாங்க பூஜையும், ருத்ரஜபம், கலசாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, ஜம்பு விநாயகர் கோவிலில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் சீர்வரிசை வைபவமும், அதை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.