விழுப்புரம்: முண்டியம்பாக்கத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலில் மகா சுதர்சன வேள்வி 108 நாட்கள் நடக்கிறது. உலக மக்கள் நன்மைக்காக கடந்த மே 14ம் தேதி துவங்கிய யாகம் வரும் செப்., 3ம் தேதி வரை 108 நாட்கள் நடக்கிறது. யாகத்தை கைலாச ரவிந்திரநாத் தலைமையில் புரோகிதர்கள் நடத்தி வருகின்றனர். இங்கு பூஜை செய்யப்பட்ட சுதர்சன சக்கரத்தை பக்தர்கள் பெற முகவரி, ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.