சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி பகுதி கிராமங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு கழுமரம் ஏற்றம் நடந்தது. செங்குறிச்சி முத்தாலம்மன், பகவதியம்மன், கரையம்மன் கோயில் திருவிழா கடந்த ஜூன் 28 அன்று துவங்கியது. அன்று முதல் கோயில்களில் அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், கிடா வெட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முத்தாலம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கழுமரம் ஏற்றம் நடந்தது. பாரம்பரியமாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கழுமரம் ஏறினர். இதே போல் ஆலம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டும் பக்தர்கள் கழுமரம் ஏறினர்.