பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
11:07
திருப்பதி: திருச்சானுாரில், 48 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீபத்மாவதி நிலையத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி வருகிறது. திருச்சானுார் பத்மாவதி தாயாரை தரிசிக்க தினசரி, 25ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், திருச்சானுாரில் தங்க விடுதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் திருச்சானுாரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஷீகாரி காலனி அருகே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், 48 கோடி ரூபாய்செலவில், 7 தளங்களை கொண்ட ஸ்ரீபத்மாவதி நிலையத்தை கட்ட துவங்கியது. இங்கு, 200 வாடகை அறைகள், 5 டார்மெட்ரிகள், தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், ஆன்மிக நுாலகம், ரயில், பஸ் டிக்கெட் கவுன்டர்கள், ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட் கவுன்டர் உள்ளிட்டவை இடம் பெற உள்ளன.அத்துடன் அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட பயர் சேப்டி, லாக்கர், கிச்சன் மற்றும் உணவு விடுதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் வரும், 2018, டிசம்பரில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது, என தேவஸ்தானம் தெரிவித்தது.