நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா: ஜூலை 17ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2017 01:07
திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 17ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 20ல் மதியம் 12:௦௦ மணிக்கு காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. இரவு 8:௦௦ மணிக்கு அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்தில், ௪ ரதவீதிகளிலும் உலா வருவார்.ஜூலை 26ம் தேதி இரவு 8:௦௦ மணிக்கு கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருநாள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ரோஷிணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.