மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2017 11:07
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்க சென்று, இந்திர ப தவியை இழந்த தேவேந்திரன், இத்தலத்தில் சிவபெருமானை, புனுகுப்பூனை வடிவில் பூஜித்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம். இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 10ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 6ம் கால யாகசா லை பூஜைகள் நிறைவுபெற்று, பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்று, யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியம் முழங்க எடுத்துவரப்ப ட்டு, கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை மயிலா டுதுறை சிவபுரம் வேத,சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் செய்துவைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் ராஜசேகரன் செய்திருந்தார். கும்பாபிஷே கத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.