பதிவு செய்த நாள்
17
ஜூலை
2017
01:07
ஆர்.கே.பேட்டை: கிராமத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள வழிகாட்டி விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. மாலையில், உற்சவர் வீதியுலா எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை அடுத்துள்ள வங்கனுார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது வழிகாட்டி விநாயகர் கோவில். வெளியூருக்கு செல்பவர்களும், வெளியூரில் இருந்து, ஊருக்கு வருபவர்களும் இவரின் கருணை பார்வையில் இருந்து தப்ப முடியாது. இந்த கோவில் புனரமைப்பு பணிகள், கிராமத்தினரின் பங்களிப்புடன், இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த வெள்ளிக்கிழமை காலை துவங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகளுக்கு பின், நேற்று காலை, புனிதநீர் கலச புறப்பாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கோவில் கோபுரம் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதில், வங்கனுார், சஞ்சீவிபுரம், சிங்கசமுத்திரம், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான் வீதியுலா எழுந்தருளினார்.