திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே என்.வைரவன்பட்டி வளரொளிநாதர் உடனாய வடிவுடையம்மை கோயிலில் வயிரவர் சுவாமிக்கு பிரமோற்ஸவம் இன்று துவங்குகிறது. நகரத்தார் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வயிரவர் சுவாமிக்கு ஆடிமாதம் 12 நாள் பிரமோற்ஸவம் நடைபெறும்.இன்று காலை 6:15 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்குகின்றன. மாலை 4:00 மணிக்கு மேல்காப்புக்கட்டி உற்சவம் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு வயிரவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.நாளை காலை 7:15 மணிக்கு சுவாமி புறப்பாடும், மாலை 4:40 மணிக்கு யாகசாலை பூஜைகளும் நடைபெறும். இரவில் சிம்மவாகனத்தில் வயிரவர் திருவீதி வலம் வருவார். தொடர்ந்து தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.ஜூலை 27 மாலையில் வயிரவருக்கு சிறப்புத் தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் காலையில் தீர்த்தவாரி, இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும்.ஜூலை28 ல் 12 ம் திருநாளை முன்னிட்டு காலையில் பஞ்ச மூர்த்திகள், வயிரவ சுவாமிக்கு மகாபிேஷகமும், மாலையில் திருக்கல்யாணம், இரவில் திருவீதி உலாவுடன் பிரமோற்ஸவம் நிறைவடையும்.