பதிவு செய்த நாள்
17
ஜூலை
2017
01:07
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவின், 24வது ஆண்டு விழா முன்னிட்டு, திருப்பதி திருமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து, பாதயாத்திரையாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 15 நாட்களுக்கு முன், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மாலை அணிந்து, அன்று முதல் பக்தர்கள் விரதம் இருந்தனர். நேற்று முன்தினம், தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, குருசாமி தேவராஜன் தலைமையில் திருப்பதி திருமலைக்கு ஏழுமலையான் பாதயாத்திரை பக்தர்கள் நடைபயணத்தை மேற்கொண்டனர். இதில், அய்யர்மலை, குளித்தலை, முசிறி, தா.பேட்டை வழியாக திருச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கு சென்று, சித்தூர் வழியாக, பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு செல்கின்றனர்.