சிவன் கோயில்களில் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டு: ஜன.3 ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2025 10:12
பரமக்குடி: பரமக்குடி சிவன் கோயில்களில் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. பரமக்குடி சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் தினமும் அதிகாலை மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்பட்டு வருகிறது. இங்கு ஆருத்ரா விழாவையொட்டி நேற்று இரவு மாணிக்கவாசக சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தினமும் காலையில் மாணிக்கவாசகர் ஆடி வீதி பிரதட்சணம் வருகிறார். ஜன., 2 இரவு சிவகாமசுந்தரி நடராஜமூர்த்தி உற்சவர் பச்சை சாத்தி புறப்பாடாகிறார். பின்னர் மகா மண்டபத்தில், ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்வுகள் நடக்கிறது. மறுநாள்(ஜன. 3) அதிகாலை கோயில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் நடராஜருக்கு மகா அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ளது. இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாதசுவாமி என அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ர தரிசன விழா நடக்கிறது.