திருப்புவனம்: ஆடி பிறப்பை கிராமப்புற மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். ” ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி ” ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று ஏர் பூட்டி உழவு செய்து விதைப்பது வழக்கம். ஆடி மாதம் புதுமணத்தம்பதிகளை அழைத்து வந்து புது துணி எடுத்து கொடுத்து அசைவம் சமைத்து விருந்து வழங்குவது உண்டு. ஆடி மாதம் முதல் தேதியன்று அசைவம் சமைப்பது பல வீடுகளில் வழக்கம். நேற்று ஆடி முதல் தேதி என்பதால் திருப்புவனம், லாடனேந்தல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 25க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாலை 4:00 மணி முதல் கறி விற்பனை சூடுபிடித்தது. தனிக் கறி கிலோ 500 ரூபாய் என்றும், எலும்புடன் கூடிய கறி கிலோ 450 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டது. கறிக்கடை உரிமையாளர் கண்ணன் கூறுகையில், சாதாரண நாட்களில் 4 ஆடுகள் வரை விற்பனையாகும். ஆடி பிறப்பு என்பதால் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு கறிகள் விற்பனை செய்யப்பட்டன. என்றார்.