பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
01:07
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17 முதல் ஆக.,10 வரை நடக்கிறது. ஆக., 11ல் வெள்ளித் தேர் உலா நடக்கிறது.ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, இக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நுாறாயிரம் மலர்கள் துாவி, லட்சார்ச்சனை நேற்று துவங்கியது.ஆக.,10ல் லட்சார்ச்சனை பூர்த்தி விழாவும், ஆக.,11ல் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாக பூஜையும் நடக்கிறது. ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும் காலை 7:௦௦ மணிக்கு பெரிய நாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடக்கும். மாலை 6:30 மணிக்கு முத்தங்கி, சந்தனகாப்பு, மீனாட்சி உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
வெள்ளித் தேர் : ஆடி கடைசி வெள்ளி யில் (ஆக.,11) பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8:30 மணிக்கு அம்மன் வெள்ளித் தேரில் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கும். இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.