பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
01:07
திருத்தணி;திருத்தணி, சுந்தர விநாயகர் கோவிலில், ஆடி மாதம் முதல் நாளையொட்டி, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று, ஆடி மாதம் முதல் நாளையொட்டி, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.கோவில் வளாகத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு, யாகசாலையில், ஐந்து கலசங்கள் அமைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுந்தர விநாயகருக்கு பால், பன்னீர், தேன் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.