திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்களின்மாதமாக உள்ளது. ஆனித்தேரோட்ட விழா அண்மையில் நடந்தது. ஆடிப்பூர திருவிழா நேற்று காலைகாலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் குறிப்பாகபெண்கள் அதிகளவில் பங்கேற்றனர். இவ்விழாவின் நாளாம் திருநாளான 20ம் தேதி வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ரதவீதிகளிலும் உலா வருவார். ஆடிப்பூர விழாவின் பத்தாம் நாளான 26ம் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு கோயில் ஊஞ்சசல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருநாள்நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ரோஷிணி மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.