அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவிலில், நாளை பூச்சாட்டு நடக்கிறது. ஆடித்தேரோட்ட விழாவுக்கு, 26ல், கொடியேற்றப்படுகிறது. ஆக.,2 முதல் வனபூஜை செய்து, 9ல் தேரோட்டம் நடக்கிறது. ஆக.,12 வரை, புகழ்பெற்ற குதிரை மற்றும் மாட்டுச்சந்தை நடக்க உள்ளது. இதை கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.